என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வெள்ளிப் பதக்கம்
நீங்கள் தேடியது "வெள்ளிப் பதக்கம்"
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #DuteeChand
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுத் தொடரில், இன்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை டூட்டி சந்த் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மாலையில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இவர் பந்தய தூரத்தை 23.20 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இப்போட்டியில் பஹ்ரைன் வீராங்கனை ஒடியாங் எடிடியாங் தங்கப் பதக்கமும் (22.96 வினாடி), சீனாவின் வெய் யோங்லி வெண்கலப் பதக்கமும் (23.27 வினாடி) வென்றனர். டூட்டி சந்த் முன்னதாக 100 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த போட்டியின் முடிவில், இந்தியா 9 தங்கம், 20வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 52 பதக்கங்களுடன் 9 இடத்தில் நீடிக்கிறது. #AsianGames2018 #DuteeChand
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் வில்வித்தை அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. #AsianGames2018 #IndianArcheryMen
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இன்று வில்வித்தைப் பிரிவுகளுக்கான இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் பெண்களுக்கான அணிகள் பிரிவில் இந்திய அணி, தென்கொரிய அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 15 வெள்ளி, 20 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IndianArcheryMen

அதன்பின்னர் நடைபெற்ற ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவும், தென் கொரியாவும் மோதின. போட்டியின் நிறைவில் இரு அணிகளும் தலா 229 புள்ளிகள்பெற்றதால் போட்டி டை ஆனது. இதையடுத்து ஷூட் ஆப் முறையில் இரு அணிகளுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கொரிய அணி, வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் சவுகான் ரஜத், சைனி அமான், வர்மா அபிஷேக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதன் மூலம் இந்தியா 8 தங்கம், 15 வெள்ளி, 20 வெண்கலம் என 43 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IndianArcheryMen
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் இந்திய பெண்கள் வில்வித்தை அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. #AsianGames2018 #IndianArcheryWomen
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டித் தொடரில் இன்று வில்வித்தை பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்றது.
இந்த போட்டியின் முடிவில், இந்தியா 8 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IndianArcheryWomen
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டித் தொடரில் இன்று வில்வித்தை பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்றது.
பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் இந்திய அணியும், தென்கொரிய அணியும் மோதின. இதில், இந்திய அணி 228-231 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் கிரார் முஷ்கன், குமாரி மதுமிதா, வென்னம் ஜோதி சுரேகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த போட்டியின் முடிவில், இந்தியா 8 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IndianArcheryWomen
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் கபடி அணி, இறுதிப்போட்டியில் ஈரானிடம் தோல்வி அடைந்ததால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. #AsianGames2018 #IranianWomensKabaddi
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அரையிறுதியில் சீன தைபே அணியை 27-14 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஈரானை எதிர்கொண்டது.
இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IranianWomensKabaddi

மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 24-27 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IranianWomensKabaddi
×

X